பாமக நடத்திய போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசு தங்களது போராட்டத்தை மட்டும் தடுத்து நிறுத்தியது ஏன் என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனது ஆதரவாளர்களுடன் தேசிய தெய்வீக யாத்திரை சென்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் திண்டிவனம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இதுகுறித்து அவர்” பாமகவினர் நடத்திய போராட்டத்தை அனுமதித்த அரசு, ஆட்சியரிடம் அனுமதி பெற்று சென்ற எனது நியாயமான பேரணியை தடுத்து நிறுத்தியது ஏன்? எங்களை சாலையில் நிறுத்தி போலீசார் கேவலப்படுத்தி கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.