Categories
மாநில செய்திகள்

பாமகவை தடை செய்யுங்க…! ஒரே ரவுடியா இருக்காங்க…. பொளந்து கட்டிய விக்ரமன் …!!

பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தெரிவித்தார்.

அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்தவருமான விக்ரமன், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம் போல ,பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறோம்.

ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சியால் அதிகம் பாதிக்கப்படப்போவது வன்னிய சமுதாய மக்கள்தான். அவர்கள் மேல் தான் ஒரு தேவையில்லாத பிம்பம் வந்து உருவாகுகிறது. வணிகர்களாக  இருக்கக்கூடிய பெரும்பாண்மையான நல்லவர்கள்தான், ஆனால் இந்த பாட்டாளி மக்கள் கட்சியினால், தூண்டி விடக் கூடியவர்கள்….   தூண்டிவிடப்படுபவர்களால்…. அவர்களுக்கும் கெட்ட பெயர் வருகிறது.

அவர்களும் சமுதாயத்திலும் எப்படி பார்க்க படுவார்கள் ? ரவுடிகளாக,ஒரு வன்முறை கும்பலாக பார்க்கப்படுவார்கள். இதனால் நாட்டின் நலனுக்காக, பொதுமக்களின் நலனுக்காக, பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்யவேண்டும். இந்த வன்முறை கும்பலுக்கும், வன்முறை செயலுக்கு சரியான ஒரு பாடத்தை தமிழக அரசு கொடுக்க வேண்டும். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விக்ரமன் தெரிவித்தார்.

Categories

Tech |