தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. பென்னாகரம் – ஜிகே மணி, ஆத்தூர் (திண்டுக்கல்) திலகபாமா, கீழ்பெண்ணாத்தூர்- செல்வகுமார், திருப்போரூர் – திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெயம்கொண்டம்- கே.பாலு, ஆற்காடு – கே.எல் இளவழகன், திருப்பத்தூர்- டி.கே ராஜா, தர்மபுரி- எஸ்பி வெங்கடேஸ்வரன், சேலம் மேற்கு – இரா.அருள், செஞ்சி- எம்.பி.பி.எஸ் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.