Categories
மாநில செய்திகள்

பாம்பன், தூத்துக்‍குடி, கடலூர் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்‍கை கூண்டு …!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் நாகை, பாம்பன் தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாகவும் நாளை புயலாக மாறக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலுக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நாளை காலை மேற்கு வடமேற்கு திசையில் நகர்வதன் காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மீண்டும் புதிய புயல் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் சின்னம் வலு பெற்றுவருவதால் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தருவை குலத்தைச் சேர்ந்த 46 விசைப்படகுகள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் கடலூர் துறைமுகங்களும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |