ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்றானது மதுரை நோக்கி பாம்பன் பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தால் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த முயன்று பிரேக் பிடித்துள்ளார். அப்போது கன மழையின் காரணமாக பாலத்தில் மழைநீர் தேங்கி நின்றதால் பேருந்து நிற்காமல் இழுத்துச் சென்று எதிராக ராமேஸ்வரம் நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும் பயணம் செய்த பயணிகள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். இதனால் அங்கு சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.