மிதவை மோதி விபத்து ஏற்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் மீது 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக இரும்பு மிதவைகளில் கிராப் கலவை இயந்திரங்கள் பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பாலத்தின் மீது மிதவை ஒன்று மோதியது.
ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மிதவை அகற்றப்பட்டது. இந்நிலையில் மிதவை மோதிய பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சென்னையில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ராம் கிர்பால் பாம்பன் ரயில் பாலத்தின் பொறியாளர்கள் குழு உதவியுடன் ஆய்வு செய்தார்.