Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதை எடுக்கத் தான் அங்க போனேன்… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

சேலம் மாவட்டத்தில் சோளத்தட்டு அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள மெய்யனூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். கவிதா விவசாய தோட்டத்தில் சோளத்தட்டு அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சோளத்தட்டு அறுத்து கொண்டிருக்கும் போது கவிதாவை பாம்பு கடித்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கவிதாவை  மீட்டு பூதப்பாட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து  மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கவிதா கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து மருத்துவமனையில் கவிதாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுக் குறித்து மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |