ஒருவரை பாம்பு கடித்து விட்டால் உடனே இதையெல்லாம் செய்தால் மிகவும் ஆபத்து.
உலகில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. அதில் சில உயிரினங்கள் மனிதர்களை அச்சுறுத்தும் கூடியவை. அதிலும் குறிப்பாக பாம்பு என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். பாம்புகளில் ஏராளமான வகைகள் உள்ளது. அதில் மனிதனை கொள்ளக்கூடிய அளவுக்கு விஷ தன்மை அதிகம் உள்ளது. இவை கடித்து விட்டால் அடுத்து என்ன செய்வது என்று பலர் பதட்டம் அடைவார்கள். அவ்வாறு பாம்பு கடித்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். அதன்படி எந்த இடத்தில் அந்த நபரை பாம்பு கடித்ததும் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும்.
பாம்பு கடித்த இடத்தில் மோதிரம், வளையல், காப்பு போன்ற ஏதேனும் மனித இருந்தால் அதை உடனே அகற்ற வேண்டும். கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படும். பாபு படித்த உடல்பாகம் அருகில் இறுக்கமாக கட்ட கூடாது. அப்படி இறுக்கமாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தை தாக்கும் தன்மை உள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கு மேல் பாண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலில் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். பாம்பு கடித்தவர் முயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பாரம்பரிய மருத்துவ முறை என்ற பெயரில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையும் செய்ய கூடாது. அது மிகவும் ஆபத்தில் முடியும்.