Categories
உலக செய்திகள்

பாம்பே இருந்தாலும் தெரியாது…. யாரும் டிவி பார்த்துட்டே சாப்பிடாதீங்க…. வெளியான தகவல்….!!

பிரிட்டனில் ஒரு குடும்பம் தொலைக்காட்சி பார்த்து சாப்பிடும்போது நடைபெற்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உணவு எடுத்துக்கொள்வது நடைமுறை வாழ்வில் வழக்கமான செயலாக மாறியுள்ளது. அதுபோல் பிரிட்டனின் ஒரு குடும்பம் தேநீருடன் சாலட் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது குடும்ப தலைவி தட்டை பார்க்க அதில் ஒரு தவளை அமர்ந்துகொண்டு அதுவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது. தவளையை கண்டதும் அவர் தட்டை தூக்கி வீச தவளை துள்ளிக்குதித்து சோபாவில் கால் பதித்து அமர்ந்து கொண்டு கொண்டது.

பின்னர் அவர் கணவரும், மகனும் தவளையை பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தனர். அதன் பின் உணவு விடுதிக்கு போன் செய்து உங்களின் ஒரு பொருளைத் எங்களிடம் விட்டுச் சென்றுள்ளீர்கள் அதை வாங்கி செல்லுமாறு ஊழியரிடம் கூறியுள்ளார். பின்னர் கடை ஊழியர் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு 75 பவுண்டுகளையும் திருப்பி கொடுத்துள்ளார். இப்போது அந்த குடும்பம் தொலைக்காட்சி பார்க்கும் போது சாப்பிடும் பழக்கத்தையே விட்டுள்ளது.

Categories

Tech |