Categories
தேசிய செய்திகள் வைரல்

பாய்ந்து மிரட்டிய சிறுத்தை… பின் வாங்கினாலும் கெத்தாக எதிர்த்த பூனை… வைரலாகும் செம வீடியோ!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் சிறுத்தையும் பூனையும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் இருந்த ஒரு பூனையை சிறுத்தை ஒன்று பிடிப்பதற்காக வேகமாக தூரத்தியுள்ளது.. அதன் பிடியில் இருந்து  எப்படியாவது தப்பி விட வேண்டும் என்று பூனையும் வேகமாக ஓட, இறுதியில் இரண்டுமே அந்த பகுதியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது.. இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் இரண்டையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.. அப்போது கிணற்றின் ஒரு புறம் இருந்த சிறுத்தை தண்ணீரில் குதித்து எதிர்திசைக்கு சென்று பூனையை தாக்க பாய்ந்தது.. பூனை சற்று பின் வாங்கினாலும் கூட அதை எதிர்த்து சண்டை செய்ய நின்றது.. சும்மா தைரியமாக பூனை இரண்டு கைகளையும் தூக்கி நின்று எதிர்த்து கெத்ததாக நின்றது..

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.. இந்த காட்சி இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.. பின்னர் வனத்துறையினர் நீண்ட முயற்சிக்குப் பின் பூனை மற்றும் சிறுத்தை இரண்டும் சிறு காயம் கூட இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் செய்தித்தாளில் தகவல் வெளியாகியிருக்கிறது.. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுத்தை பாதுகாப்பாக அதன் இயற்கை வாழ்விடத்தில் விடப்பட்டுள்ளதாக மேற்கு நாசிக் பிரிவின் துணை வனக்காப்பாளர் பங்கஜ் கர்க் கூறுகிறார்.. அதேபோல பூனையும் அப்பகுதியில் விடப்பட்டது..

Categories

Tech |