கணவர் ஒருவர் தனது மனைவி ஆண் நண்பருடன் வாழ போவதாக கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே வசித்து வரும் தம்பதிகள் பாண்டியராஜன் (27) – சித்ரா (21). இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது. பாண்டியராஜன் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சித்ராவிற்கும், ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதுகுறித்து தெரிந்த பாண்டியராஜன் தனது மனைவி சித்ராவிடம் கேட்டபொழுது, தான் தனது ஆண் நண்பருடன் வாழவே விருப்பம் என்று சித்ரா தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாண்டியராஜன், தான் தூக்கிட்டு கொள்ள போவதாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.