Categories
தேசிய செய்திகள்

பாய் பிரண்டு வேணுமா பாய் ஃப்ரெண்ட்?….. பெண்களுக்கு பாய் பிரண்டுகள் சப்ளை…. பரபரப்பை கிளப்பிய மொபைல் செயலி….!!!!

உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அதன் பலனாக வீட்டில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடிக்கும் பல்வேறு வசதிகள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நமக்கு தேவையான உணவு முதல் அனைத்து பொருட்களும் வீட்டின் வாசலுக்கே வர வைக்க கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக நாம் எப்போது ஆவது தனிமையில் இருந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தால் முதலில் நாம் தேடுவது ஒரு நெருங்கிய நண்பரை தான்.அப்படிப்பட்ட சமயங்களில் நண்பர்களுடன் வெளியே சென்று ஊர் சுற்றி விட்டு வந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என நாம் பலரும் உணர்ந்து இருப்போம்.ஆனால் யார் என்றே தெரியாத ஒரு நபரை நண்பர் என்று கூறி வாடகைக்கு எடுத்து ஊர் சுற்ற முடியுமா? ஆம் கட்டாயம் முடியும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப யுகத்தில் பாய் பிரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்ற அபாயகரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது.

அதாவது பெங்களூருவில் பாய் பிரண்டுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் டாய்பாய் எனப்படும் போர்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் காதலனால் ஏமாற்றப்பட்டு,தனிமையில் அல்லது மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக செயலியும் உள்ளது. இந்த விவகாரம் தற்போது பெங்களூருவில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆதரவு குரல்களும் எதிர் குரல்களும் போட்டி போட்டுக் கொண்டு உலா வந்து கொண்டிருக்கின்றன.

Categories

Tech |