தொகுப்பாளர் ரக்சன் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்- நடிகையுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் டி.ஆர்.பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் நடிக்கும் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . அதேபோல் இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து வரும் அகிலன்- கண்மணி இருவரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் அகிலன் கண்மணி இருவருடன் இணைந்து பிரபல தொகுப்பாளர் ரக்சன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரக்சன் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி வந்துள்ளனர். ஆனால் இந்த புகைப்படம் நிகழ்ச்சி ஒன்றில் மூவரும் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.