பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தொடர்ந்து இந்த சீரியல் டி.ஆர்.பி-யில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போது பல திருப்பங்களுடன் இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனக்கு பிறந்த மற்றொரு குழந்தை தான் ஹேமா என்ற விஷயம் கண்ணம்மாவிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த உண்மை பாரதிக்கு எப்போது தெரியும் என்பது தெரியவில்லை.
இந்நிலையில் இந்த சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிசா பாரதிகண்ணம்மா சீரியல் செட்டில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.