பாரதியார் பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவில் MCA, M.Sc போன்ற ஏதேனும் ஒரு Master டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் NET / SET / CSIR-NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கலாம் அல்லது Ph.D பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்பட்ட பின் மாதம் ரூ.12,000/- ஊதிய தொகை பெறுவார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் 10.04.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது