Categories
மாநில செய்திகள்

பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை…. முதல்வர் ஸ்டாலின் புகழாரம்….!!!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நினைவு இல்லத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடங்காதவர், அவர்களுக்கு எதிராக தன் பாடல்கள் மூலம் எதிர்ப்பை தெரிவித்தவர்.

பாரதியின் பாடல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க அவரது பாடல் தொகுப்புகள் மனதில் உறுதி வேண்டும் என்ற பெயரில் வடிவமைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி இன்றைக்கும் தேவைப்படுகிறார் என்று பாரதிக்கு முதல்வர் புகழாரம் சூட்டினார். பாரதியார் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்கிறார்.

பாரதியார் குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். பல ஆயிரம் சிந்தனைகளைக் கொண்டவர் பாரதி. பாரதியின் கவிதை, பாடல்களை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியாது. பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை என்று முதல்வர் புகழாரம் கூறியுள்ளார்.

Categories

Tech |