பாரதிய ஜனதா ஆட்சியை பிடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதால், அதற்காக வன்முறையைத் தூண்ட முயற்சி செய்வதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் பாரதிய ஜனதா நடத்திய பேரணியில் கடந்த சில நாட்களுக்கு முன் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிக்கை நிகழ்ச்சியில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், “நாட்டை ஒருபுறம் கொரோனா மற்றும் டெங்கு தாக்கி வருகிறது. மறுபுறம் மிகப்பெரிய பெருந்தொற்று பாரதிய ஜனதா தாக்கிக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா ஒரு தீய சக்தி.
மேற்கு வங்காளத்தில் அரசியலில் ஈடுபடுவதாக இருந்தாலும்,நமது கலாச்சாரத்தின் அங்கமாக உள்ள ஒருசில நெறிமுறைகளுக்கு கட்டாயம் உட்பட்டுதான் செயல்பட வேண்டும். ஆனால் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் செத்தால் கூட கவலை இல்லை. ஆட்சியைப் பிடிப்பதில் மட்டும் தான் ஆர்வம் இருக்கிறது. அதற்காக வன்முறையை தூண்டி விட முயற்சிக்கிறது.ஆனால் ஆட்சியை பிடிப்பது மிகவும் எளிதல்ல என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.துர்கா பூஜை குழுக்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.