அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பேசிய பொதுச் செயலாளர் சீனிவாசன் பாஜக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும். விவசாயிகளுக்கான உற தட்டுப்பாடு வந்தது இல்லை என்றும் கூறினார்.
மேலும் அரியலூரில் அதிவேகங்களில் செல்லும் கனரக வாகனங்களின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பாஜக கட்சி பற்றியும், மோடி பற்றியும், அவதூறு பரப்புபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.