Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரதிராஜாவின் மருத்துவ செலவை ஏற்க மறுத்த குடும்பத்தினர்?”…. செலவை ஏற்ற முக்கிய பிரபலம்….!!!!!

பாரதிராஜாவின் மருத்துவ செலவை முக்கிய பிரபலம் ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து பார்த்தனர். இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் பாரதிராஜா இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவ செலவு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் அவரின் மருத்தவச் செலவை ஏற்க குடும்பத்தினர் யாரும் முன்வரவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதை அறிந்த புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.ஷண்முகம் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகின்றது. இதை அறிந்த பாரதிராஜாவின் ரசிகர்கள் ஏன் மருத்துவ செலவை ஏற்க பாரதிராஜாவின் குடும்பத்தார்கள் முன் வரவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

Categories

Tech |