Categories
சினிமா தமிழ் சினிமா

“மருத்துவச் செலவை ஏற்காத குடும்பத்தார்”…. பரவி வந்த செய்தி…. பாரதிராஜா மகன் விளக்கம்…!!!!!

பாரதிராஜாவின் மருத்துவ செலவு குறித்து மனோஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து பார்த்தனர்.

தற்போது பாரதிராஜா உடல் நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். முன்னதாக பாரதிராஜா மருத்துவர் செலவு இருக்கு பணம் இன்றி தவிப்பதாக சில செய்திகள் உலாவியது. இந்த நிலையில் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, என் தந்தை தற்பொழுது நலம்பெற்று வீடு திரும்பியிருக்கின்றார். அண்மைக்காலமாக அவரின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் சில தகவல்கள் வந்தது. அதில் எதுவும் உண்மை இல்லை. அவரின் மொத்த மருத்துவ செலவையும் நான் தான் பார்த்துக் கொள்கின்றேன். ஆகையால் இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்பாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |