விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த அடிப்படையில் பாரதிகண்ணம்மா சீரியல் இப்போது வரை விறுவிறுப்புடனும், திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பாரதியாக அருண்பிரசாத் நடிக்கிறார். முதன் முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிபிரியன் நடித்திருந்தார். அண்மையில் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலிலிருந்து வெளியேறினார். அதன்பின் நடிகை கண்மணி மனோகரன் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்தார்.
இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் கண்மணி மனோகரனும் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து கண்மணி மனோகரன் பேட்டி அளித்தபோது, சீரியல் அனுபவம் தொடர்பாகவும் அவரது சினிமா பயணம் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில், நான் பாரதி கண்ணமாவை விட்டதே அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்காக தான். ஏனெனில் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டு இதையும் தொடர முடியாது. அதனால் தான் அந்த சீரியலிலிருந்து விலகிவிட்டேன். அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் என் கதாபாத்திரம் மிக எளிமையானது ஆகும் என பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.