Categories
மாநில செய்திகள்

பாரதி பாஸ்கர் உடல்நிலை…. மருத்துவர்கள் தெரிவித்த மகிழ்ச்சி செய்தி…!!!!

பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர். அவருக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள். இந்நிலையில் பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்தவாரம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |