Categories
மாநில செய்திகள்

பாரதி மொழியில் “பலே பாண்டியா”…. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்….!!!

பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி ஒவ்வொரு வருடமும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளை தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும் என்றும்,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கவிதை போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் பாரதியின் நினைவு நாள் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை பாராட்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் பாரதி மொழியில் “பலே பாண்டியா” என்று பாராட்ட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |