Categories
மாநில செய்திகள்

பாரத் தர்ஷன் சுற்றுலா ரயில் திட்டம்…. பயணிகள் அதிருப்தி….!!!!!!!

‘பாரத் தர்ஷன்’ சுற்றுலா ரயில் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துஉள்ளனர். இந்நிலையில் மக்களிடையே சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘பாரத் தர்ஷன்’ என்ற, சுற்றுலா ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் பயணியரிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம், மார்ச் முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் , பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறும் போது, ”தனியார் நிறுனங்களை ஒப்பிடுகையில், குறைந்த கட்டணத்தில் சென்று வர, சுற்றுலா ரயில் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ”மக்கள் பாதுகாப்பாகவும், நம்பகத் தன்மையோடும் பயணம் செய்தனர்.
அதிலும் குறிப்பாக, மூத்த குடிமக்கள் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கு  மிகவும் வசதியாக இருந்தது,” என்றார். வரவேற்புஇந்தியன் ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகமான ஐ.ஆர்.டி.சி., சுற்றுலா ஏற்பாட்டாளர் கே.சிவபிரசாத் கூறியிருப்பதாவது: சுற்றுலா ரயில் திட்டத்தை செயல்படுத்த மானியம் வழங்கப்படுவதால், மக்கள் குறைந்த கட்டணத்தில் சுற்றுலா செல்கின்றனர். 440 சுற்றுலாவுக்கு நாங்கள் ஏற்பாட்டாளராக பணியாற்றிஇருக்கிறோம். 80 சதவீதம் பேர் ஷீரடி, காசி, ஜோதிர்லிங்கம், பஞ்சதுவாரகா, வைஷ்ணோ தேவி போன்ற ஆன்மிக சுற்றுலாக்களுக்கு சென்று வந்தனர்.

ஒருவருக்கு குறைந்தபட்சமாக 900 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் வரையில் கட்டணம் இருந்தது. இது நியாயமான கட்டணம் என்பதால், மக்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்தது. சலுகைபுதிதாக கொண்டு வரவுள்ள, ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரயில் திட்டத்தில், பொது மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சலுகைகள் இடம்பெற வேண்டும் என  அவர் கூறினார்.
மேலும் ஐ.ஆர்.சி.டி.சி., உயர் அதிகாரிகள் கூறும் போது, ‘பாரத் தர்ஷன் சுற்றுலா ரயில் திட்டம் நிறுத்தப்பட்டாலும், பல்வேறு மாற்றங்களோடு ‘பாரத் கவுரவ்’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வரும் பணிகளை, ரயில்வே மேற்கொண்டு வருகிறது’ என கூறினர்.

Categories

Tech |