Categories
சென்னை திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன்”…. 3 கோடி மோசடி…. முக்கிய குற்றவாளி கைது….!!!!!

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளார்கள்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத் ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறி என்னை போன்ற 39 பேரிடம் போலியான நியமன ஆணை வழங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்தப் புகார் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் சென்னையை சேர்ந்த கார்த்திக்-கை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.

Categories

Tech |