Categories
சினிமா தமிழ் சினிமா

பாரப்பா….! வினோத் குமாரின் வீட்டிற்கு சர்ப்ரைஸாக சென்ற தல…. எதற்காக தெரியுமா?….!!!!

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தை பார்த்த பிறகு வினோத்குமாரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித், நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக எச்.வினோத்தின் வலிமை படத்தில் இணைந்திருக்கின்றார். அஜித்குமாரின் திரைப்படமானது கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாததால் இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஹீமா குரேஷி நடித்திருக்கின்றார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கின்றார்.

இத்திரைப்படமானது பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தாக்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுதும் ரிலீசாக உள்ளது. இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை குடும்பத்தோடு பார்த்த தல அஜித், வினோத் குமாரின் வீட்டிற்கு சர்ப்ரைஸாக சென்றிருக்கின்றார். அத்தோடு வினோத்தின் மகனுக்கு கிப்ட் ஒன்றையும் கொடுத்துள்ளார். மேலும் ஏகே 61 திரைப்படத்தையும் வினோத் குமார் இயக்குகின்றார். இப்படத்தை தயாரித்த போனிகபூரே ஏகே 61 படத்தையும் தயாரிக்கின்றார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |