Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட நிலை… வாழ்வாதாரத்தை இழந்த கலைஞர்கள்… சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்…!!

கொரோனா தொற்றினால் தெருக்கூத்து நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.  

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம் பகுதியில் பாரம்பரியத்தின் முன்னோடிகளான தெருக்கூத்து கலைஞர்கள் வசித்து வருகிறார்கள். இந்த சிறப்பு வாய்ந்த தெருக்கூத்து நிகழ்ச்சியானது திறந்த வெளியில் திரைச்சேலைகளை மறைப்புகளாக கொண்டு இரவு முழுக்க நடைபெறுகின்றது. இதனை அடுத்து இந்த தெருக்கூத்து கலைஞர்கள் ராமாயணம், மகாபாரதம், பொன்னர் சங்கர், அரிச்சந்திரன், பவளக்கொடி, முருகன், மதுரைவீரன், சிறுத்தொண்டரடிகளார் போன்ற வரலாற்று படைப்புகளை தெருக்கூத்தாக ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக இவ்வகையான கூத்துக்களுக்கு இரவு நேரத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெருக்கூத்துகளை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட கலைஞர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடியுள்ளனர். எனவே திருச்சி மாவட்ட நிர்வாகம் தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |