Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பாரம்பரியத்தை நினைவுபடுத்துவோம் ” இப்படி ஒரு திருவிழாவா…? பள்ளியில் சிறப்பு ஏற்பாடு…!!

சிறப்பாக நடைபெற்ற பாரம்பரிய உணவு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழைந்தைகள் கலந்து கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடஆண்டாப்பட்டு பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரில் பாரம்பரிய  உணவுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழா மகளிர் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்றுள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வடை, அதிரசம்,கொழுக்கட்டை,  சிமிலி உருண்டை, பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, பணியாரம், கேழ்வரகு அடை போன்ற தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவுகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்த திருவிழாவை அந்தப் பகுதி ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையேற்று நடத்தியுள்ளார். இதில் தலைமை ஆசிரியர் வளர்மதி மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு உணவை ருசித்து மகிழ்ந்துள்ளனர்.

Categories

Tech |