புதுமண தம்பதியினர் மாட்டு வண்டியில் சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி பகுதியில் ராசா முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இவர் லண்டனில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அஜித்குமாருக்கும் கௌதமி என்ற பெண்ணுக்கும் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இதனை அடுத்து கோவிலில் இருந்து மணமக்கள் மாட்டு வண்டியில் மோகனூர் வழியாக மணமகன் வீட்டிற்கு சென்றனர். இதனை சாலையில் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதுகுறித்து மணமக்கள் கூறும் போது, தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக மாட்டுவண்டியில் சென்றதாக தெரிவித்துள்ளனர்.