திருமணம் செய்து கொண்ட பட்டதாரி தம்பதிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் செய்து கிராம மக்களை பிரமிக்க வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த தமிழாசிரியர் சுப்ரமணியத்தின் மகன் கௌதமுக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர் சௌந்தர்யாவுக்கும் கோபியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணமகன் வீட்டிற்கு மக்கள் மாட்டு வண்டிகள் சென்றனர்.
புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் சென்றதை அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மணமக்களின் பெற்றோர் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.