2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் ரகத்துடன் சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி ராஜா, அம்பேத்குமார் இருவரும் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது 2022 -23ம் ஆண்டு காண தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத் துறை,உழவர் நலத்துறை அமைச்சர் ஆர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.