Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பாரம்பரிய பழங்கள் மற்றும் காய்கறிகள்…. சிறப்பாக நடைபெற்ற கருத்தரங்கம்…!!

பாரம்பரிய உணவுப் பொருள்களை பயிர் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமென அமைச்சர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு  மாவட்ட அளவிலான பாராம்பரிய காய்கறிகள் மற்றும் பழங்கள்  குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இவர் தற்போது நாட்டு பசுக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனவும், நாம் உண்ணும் உணவு பொருட்களில் அதிகமான அளவு ரசாயனம் கலந்து இருப்பதாகவும் கூறினார். எனவே விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் பாராம்பரிய காய்கறிகள் மற்றும் பழ வகைகளை நடவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதன்பிறகு அனைத்து மக்களும் பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

நம் மாவட்டம் மண் வளம் நிறைந்த மாவட்டமாகும். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் தமிழக அரசு வேளாண்மை துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நலத்திட்டங்களை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். இந்த பாரம்பரிய காய்கறிகள் மற்றும் பழ வகைகள் குறித்த கருத்தரங்கில் வெற்றிபெற்ற விவசாயிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பரிசுகளை வழங்கினார்.

Categories

Tech |