பிரித்தானிய மகாராணியாரின் மரணம் இளவரசர்கள் வில்லியம் ஹரி குடும்பங்களுக்குள் சற்றே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்போல் மரபை மீறிவிடாதே என தன் மனைவியை இளவரசர் ஹரி இரகசியமாக தடுக்கும் காட்சியைக் காண ராஜகுடும்ப ரசிகர்கள் தவறவில்லை. இளவரசர் ஹரி மரபுகளை மீறி விவாகரத்தான ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்த விடயத்தால் ராஜகுடும்பத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடைசியில் ஹரியும் அவரது மனைவியும் ராஜகுடும்பத்தைவிட்டு மட்டுமல்ல, பிரித்தானியாவைவிட்டே வெளியேறும் ஒரு நிலை உருவானது.
இந்நிலையில் மகாராணியாரின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருமாறு தன் தம்பிக்கு அழைப்பு விடுத்தார் இளவரசர் வில்லியம். அதை ஏற்றுக்கொண்டு ஹரியும் மேகனும் பிரித்தானியா வந்துள்ளார்கள். இந்நிலையில், மீண்டும் தன் மனைவி ராஜகுடும்ப மரபுகளை மீறிவிடக்கூடாது என்பதில் ஹரி கவனம் செலுத்துவதுபோல் தெரிகின்றது. காரணம் அதை நிரூபிப்பது போல் சமீபத்தில் ஒரு விடயம் நடந்ததை ராஜகுடும்ப ரசிகர்கள் கவனித்துள்ளார்கள். அதாவது, பிரித்தானிய மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மலர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வில்லியம், ஹரி இருவரும், தத்தம் மனைவிகளுடன் வந்தார்கள். அப்போது வழக்கம்போல மேகன் வேகமாக நடக்க, அவரது கையைப் பற்றியிருந்த ஹரி, அவரது வேகத்தைக் குறைக்கும் வகையில் மேகனின் கையை சற்று பின்னோக்கி இழுத்து, மரபை மீறிவிடாதே என இரகசியமாக மனைவிக்கு சிக்னல் கொடுத்தார்.
அதாவது, இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் தான் இப்போது முதலில் நடக்கவேண்டும். இப்போது, இளவரசர் வில்லியம், முன்னர் இளவரசர் சார்லஸ் வகித்து வந்த வேல்ஸ் நாட்டின் இளவரசர் என்ற பதவியையும், அவரது மனைவி கேட், வேல்ஸ் நாட்டின் இளவரசி என்ற பதவியையும் வகிக்கிறார்கள். ஆகவே, அவர்கள் முன்னாலும், ஹரியும் அவரது மனைவியும் பின்னாலும் நடப்பதுதான் முறையாகும். ஆக, அதை உணர்த்தும் வகையில்தான், தன் மனைவியின் கையைப் பிடித்து மெதுவாக இழுத்து, அவர் ராஜகுடும்ப மரபை மீறிவிடாமல் காத்துக்கொண்டார் ஹரி!சகோதரர்கள் வில்லியமும் ஹரியும் இணைவார்களா என இன்னமும் காத்திருக்கும் ராஜகுடும்ப ரசிகர்களை, இந்த விடயமும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.