Categories
தேசிய செய்திகள்

பாராகிளைடிங் செய்யும் போது ஏற்பட்ட விபரீதம்…. நொடியில் பறிபோன 2 உயிர்….. பெரும் சோகம்….!!!!

பாராசூட்டில் இருந்து தவறி விழுந்து  2 பேர்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் பகுதியில் ஈஷா ரெட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வழிகாட்டியான சந்திப்பு சந்தீப் குருங் என்பவருடன் சேர்ந்து ஈஷா ரெட்டி சிக்கிம் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் 2 பேரும் லாட்சுவ் நியூ பாயிண்டில் இருந்து பாராகிளைடிங் செய்துள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியுள்ளது.

இதனால் பாராசூட் கட்டுப்பாட்டை இழந்து ஈஷா ரெட்டி மற்றும் சந்தீப் குருங் ஆகிய இருவரும் நீரோடைக்குள் விழுந்துள்ளனர். இதுகுறித்து ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரையும் இராணுவத்தினரும்‌, காவல்துறையினரும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இவர்கள் 2 பேரின் உடலும் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |