பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தை சேர்ந்த சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த ஆண்டுகளில் இந்தியாவிற்கு இதுவரை 10 பதக்கங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! pic.twitter.com/oDREUI9Efa
— M.K.Stalin (@mkstalin) August 31, 2021
வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு 2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் தெரிவித்துள்ளதாவது: “அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. என்று கூறியுள்ளார்.