Categories
சினிமா தமிழ் சினிமா

“பாரிஸில் போட்டோ ஷூட் நடத்திய பிரியங்கா மோகன்”….. இணையத்தில் வைரல்….!!!!

இணையத்தில் பிரியங்கா மோகன் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

நடிகை பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ”டாக்டர்” திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது எந்த படங்களும் கையில் இல்லாத நிலையில் ஓய்வாக பாரீசில் இருந்து வருகின்றார். இவர் பாரிஸில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றார். மேலும் அங்கு தனது போட்டோ ஷுட்டுகளையும் நடத்தி வருகின்றார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அழகாக இருப்பதாக தெரிவித்தும் லைக்குகளை குவித்தும் வருகின்றார்கள்.

 

Categories

Tech |