நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்த படம் பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயீன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கடந்த 2018-ஆம் ஆண்டே பாரிஸ் பாரிஸ் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாரானது.
ஆனால் ஒரு சில பிரச்சினை காரணமாக இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த காஜல் அகர்வாலிடம் பாரிஸ் பாரிஸ் படம் எப்போது ரிலீஸாகும்? என கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் ‘இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்பது எனக்கே தெரியாது’ என கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது .