இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இவர் கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததிலிருந்து திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்களை கொண்ட நடிகைகளில் சமந்தா முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை 2 கோடியே 37 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இரண்டாமிடத்தில் காஜல் அகர்வால் மூன்றாம் இடத்தில் ஸ்ருதிஹாசன் நான்காம் இடத்தில் தமன்னா ஐந்தாம் இடத்தில் கீர்த்தி சுரேஷ் இடம்பிடித்துள்ளனர்.