சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா குறித்து மகேஷ்பாபுவின் மகள் பேட்டியில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரின் மகள் 9 வயது சித்தாரா. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்கள், டான்ஸ் ஆடிய வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றார். மேலும் இவர் மகேஷ்பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார்.
மேலும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, எனக்கு சமந்தா ஆண்டி பெஸ்ட் பிரண்ட். நான் எப்போது படப்பிடிப்புக்கு சென்றாலும் என்னுடன் ஜாலியாக விளையாடுவார். அது எனக்கு ரொம்ப ஜாலியாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் ராஷ்மிகா மந்தனா பற்றி கூறியதாவது, மிகவும் அழகானவர், அன்பானவர் எனக் கூறியுள்ளார்.