நடிகர் சிம்புவின் திருமண செய்தியானது கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் நடிகராக வலம் வரும் சிம்பு இடையில் சில காரணங்களால் பட வாய்ப்புகள் இல்லாமல் மாநாடு திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. தற்போது இவரின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
சிம்பு எங்கு சென்றாலும் திருமணம் எப்போது என்று தான் அனைவரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்ற செய்தி வந்திருக்கின்றன. இவர் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூடிய விரைவில் இதுபற்றிய தகவல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.