Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா….! “தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனை”….. விலை எம்புட்டு தெரியுமா…????

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் புடவை விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழ் திரை உலகில் படங்களோ அல்லது நடிகர்களே பிரபலமாகும் போது உடைகளாகவோ அல்லது அவர்களின் பெயரில் அணிகலன்களோ விற்பனை செய்வார்கள். பிரபல நடிகர்களின் உருவம் பொறித்த உடைகள் விற்பனைக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகின்றது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த புடவையில் பொன்னியின் செல்வன் நடிகர்களின் படங்கள், வாள் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றது. தற்போது இந்த புடவைகளானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த பொன்னியின் செல்வன் புடவை ரூபாய் 2100 என சொல்லப்படுகின்றது. பொன்னியின் செல்வன் திரைப்படமானது இதுவரை 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |