இயக்குனர் தங்கர்பச்சன் விவசாயம் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான தங்கர்பச்சன் சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். இவர் தற்போது டக்கு முக்கு திக்கு தாளம் என்ற திரைப்படத்தில் தனது மகனை வைத்து இயக்கி வருகின்றார்.
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09ZihJmPLKWmrk65eEkFQQEWYiMxNom9XBrR2rZ8cWoyosJYv3CbWDDfFXGvHtRc5l&id=100002517969128&scmts=scwsplos
விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயத்திற்கு ஆதரவாக அவ்வப்போது பேசி வருகின்றார். மேலும் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றார். விவசாயம் செய்யும் வீடியோக்களில் பகிர்ந்து வரும் இவர், தற்போது அவரே வயலில் இறங்கி வேலை செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். வேர்க்கடலையின் சிறப்பு குறித்து பாடியபடியே அறுவடை செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.