Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்க்க தான் வந்தேன்..! அரசியல் செய்ய வரல …! செம போடு போட்ட எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது என்ன அரசியலா செய்கிறோம், தண்ணீர் தேங்கி இருக்கிறது பார்க்கிறோம், நீங்கள் தொலைக்காட்சியில் படம் பிடிக்கிறீர்கள், உண்மை செய்தியை தானே சொல்கிறேன்.நாங்கள் மறச்சிட்டு சொல்லல, எல்லா பகுதியிலும் நீங்களே கேட்குறீங்க, தொலைக்காட்சி நண்பர்கள் கேட்டிங்க,

கொளத்தூர் தொகுதியில் இடுப்பளவு தண்ணீர் நிக்குது என்று சொன்னீர்கள், அதைத்தான் நாங்கள் பார்க்க வந்திருக்கிறோம். அந்த பார்வையிட்டு மக்கள் சொன்ன குறைகளை தான் நாங்கள் தொலைக்காட்சியில் மூலமாக தெரிவிக்கிறோமே ஒழிய. இதில் அரசியல் செய்யவேண்டிய நோக்கம் எங்களுக்கு கிடையாது.

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் இன்றைக்கு மக்கள் துன்பம், வேதனைப்படுகிறார்கள், துன்பத்திலிருந்து, வேதனையிலிருந்து இந்த அரசு மக்களுக்கு மீட்டெடுக்கின்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம், அந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் நாங்கள் பார்வையிட வந்தேனே ஒழிய அரசியல் செய்வதற்காக அல்ல என தெரிவித்தார்.

Categories

Tech |