Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பார்க்க வராத கள்ளக்காதலன்…. பென் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக செந்தில் இறந்துவிட்டார். இந்நிலையில் லாரி ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.

கடந்த ஒரு மாதமாக பெருமாள் ராணியை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் ராணி செல்போனில் பெருமாளை தொடர்பு கொண்டு என்னை பார்க்க வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளார். ஆனாலும் பெருமாள் அவரை பார்க்க செல்லவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராணி எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |