Categories
தேசிய செய்திகள்

பார்க் வந்த பெண்…. அத்துமீறிய வாலிபர்…. நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. பரபரப்பு…..!!!!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள மஹாராஜா பூங்காவில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி, ஒருவரை கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தி சாலையில் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொடூரமாக தாக்கப்பட்ட அந்த நபர் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மேகராஜ் என்பதும், இவர் அப்பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் மேகராஜ் பூங்காவில் இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின் மேகராஜை காவல்துறையினரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக அந்த கும்பல் அவரைத் தாக்கி, நிர்வாணப்படுத்தி, பரபரப்பான போக்குவரத்துச் சந்திப்பில் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட மேகராஜ் மீது பாதிக்கப்பட்ட பெண் எந்த புகாரும் கொடுக்கவில்லை. தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மேகராஜை தாக்கி, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அடையாளம் தெரியாத 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Categories

Tech |