Categories
மாநில செய்திகள்

பார்சலில் வழங்க பேக்கரிக்கும் அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றுமுதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி டீக்கடைகள் அனைத்து 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டல் மற்றும் லாட்ஜ் வாடிக்கையாளர்களுக்கு தங்கும் அறைகளுக்கு கொண்டுபோய் உணவு வழங்கவேண்டும் என கூறியுள்ளது. இதேபோல இனிப்பு, காரம் போன்ற தின்பண்டங்களை பார்சலில் வழங்க பேக்கரிக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |