பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வரகூர் கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட விஜயலட்சுமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பழனிவேல் தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.