Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பார்த்தாலே பரவசமாகும் கடற்கரை” சூரிய உதயத்தை பார்க்க குவிந்த கூட்டம்….. விழாக்காலம் போல் களைகட்டிய குமரி….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர்.

ஒரு மனிதன் ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி அந்த இடங்களை பார்த்து ரசிப்பது சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவங்களை பெற்றிட சுற்றுலா செல்வது அவசியம் என்று கூறப்படுகிறது. ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று மகிழ்வதால் அவர்களுக்கு மன நிம்மதி மற்றும் ஒரு புதிய புத்துணர்வும் ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சுற்றுலா செல்வதற்கு விரும்புவதால் உலகின் பல நாடுகளும் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

அதோடு மக்கள் சுற்றி பார்ப்பதற்கான இடங்களும் விரல் அளவில் என்ன முடியாத பல அளவிற்கு இருக்கிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்நிலையில் நேற்றும் அதற்கு முந்தைய நாளும் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்ததால் விழாக்காலம் போல் காட்சி அளித்தது.

இந்த சுற்றுலா பயணிகள் காலையில் தோன்றும் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன் பிறகு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று மகிழ்ந்தனர். அதன் பிறகு காந்தி நினைவு மண்டபம், சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், சன்செட் பாயிண்ட், தமிழன்னை பூங்கா, காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா போன்ற பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Categories

Tech |