Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனின் இரவின் நிழல் படத்திற்கு அங்கீகாரம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆர். பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்- லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் -கிராமி விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்து இரு அமைப்புகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |