பார்த்திபன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் பார்த்திபன் அடுத்ததாக நடிக்கும் படத்தை எழில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
Happy to share the FL of #YuthaSatham. Congrats @rparthiepan sir & team.
Dir by #Ezhil @Gautham_Karthik @Saipriyaa_ @realRoboshankar
An @immancomposer Musical
Prod by #DVijayakumaran @Kallal_Global@DoneChannel1 pic.twitter.com/rwPyydOGxI— VijaySethupathi (@VijaySethuOffl) August 22, 2021
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு யுத்த சத்தம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, பார்த்திபன் இருவரும் நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் துக்ளக் தர்பார் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .